Categories
தேசிய செய்திகள்

கொடூரம்….. ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த உடல்கள்…. நடந்தது என்ன?…. அதிர்ச்சி தகவல்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பஸ்தி மாவட்டத்தில் ருதவுலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குடும்பத்துடன் அங்கித் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவில் வெளியே செல்கிறேன் என்று கூறிவிட்டு திரும்பி வரவில்லை. இந்நிலையில் அந்த பகுதியில் கரும்பு தோட்டம் அருகில் உள்ள 18 வயது வாலிபர் உடல் ஒன்று கிடைத்தது. இதனை பார்த்த தோட்ட உரிமையாளர் பராஸ் நாத் சவுத்ரி உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார். அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணா மிஸ்ரா தலைமையில் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அங்கித் கொல்லப்பட்டது தெரிய வந்தது. அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டது. அங்கீகத்தில் உடல் அடையாளம் காணப்பட்ட பின் அவரது வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த கிராமத்தில் இர்பான் என்பவரின் வீட்டில் அங்கித் டிராக்டர் ஓட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்று அவரது தந்தை கூறினார்.

மேலும் இரவு வீட்டை விட்டு சென்ற அங்கித் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவர் போலீசாரிடம் தெரிவித்தார். அதன் பிறகு அங்கிதின் சகோதரர் கூறியது, இர்ஷாத் மற்றும் இர்பானின் வீட்டுக்கு அங்கித் சென்றார் என்று அவர் தெரிவித்தார். இதனையடுத்து இர்ஷாத் வீட்டுக்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இரவில் இர்ஷாத்தின் சகோதரி மர்ம மரணம் அடைந்தது தெரியவந்தது. அவரை புதைத்து உள்ளனர். இதில் ஆணவ கொலை நடந்துள்ளது என்று தெரியவந்தது. இருவருக்கும் இடையை தகாத உறவு இருந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனை அறிந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் இருவரையும் கொலை செய்துள்ளனர். இளம் பெண்ணின் உடலை புதைத்து விட்டு, வாலிபரின் உடலை கரும்பு தோட்டம் அருகில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ஏ.எஸ்.பி. சவுத்ரி தெரிவித்துள்ளார். மேலும் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு இரு உடல்களும் உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |