தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிகளில் இணையவளியில் உயர்கல்வி வழிகாட்டல் நடத்தப்பட்டது. கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்கள் இந்த ஆண்டில் பல்வேறு வகை பட்டப்படிப்புகளில் சேர்ந்து உள்ளனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 முடித்த மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்து அவர்களின் உயர்கல்வி குறித்த தகவலை பெற வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் உயர்கல்வில் சேராத மாணவர்கள் யார்? அவர்கள் தற்போது என்ன செய்கின்றனர் என்பதை அறிய வேண்டும். அவர்கள் மேற்படிப்பு படிக்காததன் காரணத்தையும் கேட்டு அந்த விவரங்களை பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பட்டம் அல்லது பட்டய படிப்பில் சேராத மாணவர்களை உயர்கல்வில் சேர்வதற்கான வழிகாட்டுதலை பள்ளி ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.