நாட்டில் பண வர்த்தனைகள் மூலம் எளிமையாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து வங்கிகள் மற்றும் போலீசார்கள் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் மக்கள் ஏமாறுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு உங்களது YONO கணக்கு செயலிழக்கப்பட்டு விட்டதாகவும் மீண்டும் உங்களது வங்கி கணக்க பெற வேண்டுமென்றால் உடனடியாக நிரந்தர கணக்கு எண்ணை புதுப்பிக்க வேண்டும் என்றும் செய்தி அனுப்பியுள்ளது. ஆனால் பலரும் இந்த செய்தியை உண்மை என நினைத்து PAN கார்டை புதுப்பிக்கின்றனர். ஆனால் இது போலியான செய்தி என்று எஸ்பிஐ வங்கி அறிவுறுத்தி வருகிறது.
அதனைத் தொடர்ந்து உங்களுக்கும் இது போன்ற செய்தி வந்திருந்தால் நம்ப வேண்டாம் என்றும் ஒருபோதும் அந்த குறுஞ்செய்திக்கு பதில் அனுப்ப வேண்டாம் என்றும் எஸ்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமில்லாமல் ஒருபோதும் SBI வங்கி தகவல் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்காது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இது போன்ற குறுஞ்செய்தி வந்தால் என்ன செய்வது என்பது குறித்து தகவலையும் எஸ்பிஐ வங்கி தற்போது வெளியிட்டு ள்ளது. அதன்படி அவசியம் இல்லாமல் இது போன்ற தகவல்கள் உங்களுக்கு பகிரப்பட்டால் [email protected] என்கின்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம். ஆப்படி இல்லையென்றால் 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2021-22 நிதி ஆண்டில் மட்டுமே வாடிக்கையாளர்கள் ரூ.179 கோடி பணத்தை இது போன்ற போலியான தகவலை நம்பி இழந்து இருக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.