Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி அனைவரின் திறமைக்கு ஏற்ற வேலை…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி….!!!!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாபெரும்  திறன்மேம்பாட்டுத் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார். இதையடுத்து திறன் மேம்பாட்டு திட்ட விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “தமிழ்நாட்டு மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள் ஆவர். ஆங்கில பேச்சாற்றால் இல்லாததால் பன்னாட்டு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளைப் பெறும் எண்ணத்தை மாணவர்கள் கைவிடுகிறார்கள். ஆகவே கல்லூரி முதல் பருவத்திலேயே ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி வழங்கப்படும். வளர்ந்துவரும் தொழில் முறைகேற்ப பயிற்சி வழங்கப்படும்.

ஆங்கில பயிற்சி மட்டுமல்லாது, ஜப்பானிய மற்றும் ஜெர்மனிய மொழிப்பயிற்சியும்  அளிக்கப்படும். நான் முதல்வன் திட்டம் வாயிலாக அனைவருக்கும் வேலை மட்டுமல்ல, திறமைக்கு ஏற்ற வேலை என்பதே தமிழக அரசின் இலக்கு ஆகும். மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகளை தினசரி படிக்க வேண்டும் என முதல்வர்  வேண்டுகோள் விடுத்தார். இதற்கிடையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது ஆசைகளை திணிக்கக் கூடாது. அவ்வாறு தங்கள் ஆசைகளை திணிப்பதால் பிள்ளைகளால் படிப்பில் கவனம்செலுத்த முடியவில்லை என தெரிவித்தார்.

Categories

Tech |