தமிழகத்தில் அதிமுக ஒற்றை தலைமை விவாகரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கிய இபிஎஸ், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் ஓபிஎஸ் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஓபிஎஸ்க்கு ஆதரவாக வந்த நிலையில், ஓபிஎஸ் – இபிஎஸ் என இருவரும் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதனால் இபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றினைய வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த கால கசப்புணர்வா?அல்லது புரட்சித் தலைவரும் நம் அம்மா அவர்களும் நமக்கு புகட்டிய லட்சிய உணர்வா?எதைப்பற்றி இப்போது சிந்திக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டும்”என்று குறிப்பிட்டுள்ளார்.இதன் மூலம் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் அனைவருக்கும் மறைமுகமாக டிடிவி அழைப்பு விடுப்பதாகவே தெரிகிறது.நேற்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தனது பேச்சு நிறைய அண்ணன் டிடிவி என்று குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.