Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. சென்னையில் 28 புதிய விளையாட்டு மைதானங்கள்….. வெளியான அசத்தல் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் விளையாட்டுக்கள் இளைஞர்களை ஊக்குவித்து சாதனையாளர்களாக மாற்றப்பட்டு வருகிறது. அவர்களின் உடல் மற்றும் உள்ளம் வலிமையும் அளிக்கிறது. அதனால் தான் பள்ளிகளில் இருந்தே மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக அரசு மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளையும் நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் மைதானங்கள் அமைக்கும் பணியில் அரசு இறங்கியுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் உலகத்தரம் வாய்ந்த 28 மைதானங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த மாநகரில் தற்போது 210 விளையாட்டு திடல்கள், 96 உடற்பயிற்சி கூடங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

அதில் 4 இறகுப்பந்து விளையாட்டு அரங்கம், ஒரு கூடை பந்து உள் விளையாட்டு அரங்கம், 2 நீச்சல் குளங்கள் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 14 க்கும் மேற்பட்ட விளையாட்டு திடல்களில் கால்பந்து, டென்னிஸ், கைப்பந்து, கூடைப்பந்து போன்ற மைதானங்கள் அமைய பெற்றுள்ளது. தினசரி 50 முதல் 100 நபர்கள் இந்த விளையாட்டு திடல்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உலக தரத்தில் புதிதாக 28 மைதானங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.29.4 ஒதுக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த விளையாட்டு மைதானங்களின் தோற்றமானது உலக தரத்தில் இருக்கும். மேலும் 24 மணி நேரமும் தண்ணீர் வசதி, யூனிசெக்ஸ் கழிப்பறைகள், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் இடம், மைதானங்கள் சுற்றி மரம் என விளையாட்டு மைதானத்தின் தோற்றம் வியக்க வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |