Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சுற்றி திரிந்து”விபத்துக்களை ஏற்படுத்து மாடுகள்”…. எச்சரிக்கை விடுத்த மாநகராட்சி ஆணையர்…..!!!!!

சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதி சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றி திரிகிறது. இந்த மாடுகளால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் அதிகாரிகள் மாடுகளை அதன் உரிமையாளர்கள் பிடித்து சொந்த இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். இதனை மீறி கால்நடைகள் சுற்றித்திரிந்தால் மாநகராட்சி மூலம் பிடித்து அப்புறப்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து மீண்டும் மாடுகள்  சாலையில் சுற்றி திரிந்துள்ளது. இதனால் நேற்று நகராட்சி ஆணையர் பிரபாகரன் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி சுகாதார ஆய்வாளர் மூர்த்தி, நகராட்சி அமைப்பு ஆய்வாளர் கணேச ரெங்கன், ஆய்வாளர் ரவிச்சந்திரன், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணியை  தொடங்கினர்.

மேலும் இது குறித்து நகராட்சி ஆணையர் பிரபாகரன் கூறியதாவது. அதிகாரிகள் பிடித்த மாடுகளை அதன் உரிமையாளர்கள் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஒரு வாரத்திற்கு மேல் மாடுகளை  பெறாவிட்டால் 5 ஆயிரம்  ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இதனையடுத்து 10  நாட்களுக்கு மேல் திரும்ப பெறாவிட்டால் மாடுகள் கோ சாலையில் கொண்டு விடப்படும். பின்னர் மாடுகளை அதன் உரிமையாளர்கள் வாங்க முடியாது. எனவே பொதுமக்கள் தங்களது மாடுகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து வளர்க்க வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Categories

Tech |