Categories
அரசியல்

விநாயகர் சிலையை வீட்டுக்கு வாங்கிட்டு வரும்போது!…. இதெல்லாம் பாலோவ் பண்ணுங்க….!!!!!

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர்சதுர்த்தியானது கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ம் தேதி வருகிறது. நாடு முழுதும் பிள்ளையார் அவதரித்த இந்த நாளை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். முந்தைய காலக்கட்டத்தில் இருந்து விநாயர் சிலையை வீட்டுக்கு வாங்கி வந்து வழிபடுவதன் மூலம் அழிக்கமுடியாத தீமைகளானது விலகிசென்று நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. நாம் சிலையை வீட்டுக்கு கொண்டுவரும்போது ஒருசில நடைமுறைகளை பின்பற்றவும். அதே நேரம் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். அவற்றில் சிலவற்றை நாம் தெரிந்துகொள்வோம்.

விநாயகர்சிலையை நாம் வாங்கும்போது அதற்கு என புதுமனை வாங்கி அவற்றில் வைத்து தான் கொண்டுசெல்ல வேண்டும். இதையடுத்து விநாயகர் அமர்ந்தவாறு இருப்பது அவசியம். விநாயகரை வீட்டிற்கு அழைத்துவரும் முன்பே வீட்டை சுத்தமாக வைத்து நேர்மறையான விஷயங்கள் சுற்றிலும் இருக்குமாறு செய்ய வேண்டும். பின்  வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு ஆரத்தி எடுத்த பிறகே சிலையை உள்ளே கொண்டுவர வேண்டும்.

அத்துடன் விநாயகர் சிலையை வட கிழக்கு பார்த்து வைக்கவேண்டும். குறைந்தது வீட்டில் 3 நாட்கள் வைக்க வேண்டும். அப்போது தான் வீட்டில் மகிழ்ச்சி நிலைகொண்டிருக்கும். வீட்டில் உள்ள 3 நாட்களும் கட்டாயம் காலை, மாலை என 2 வேளையும் பூஜைசெய்ய வேண்டும். மேலும் விநாயகருக்கு பிடித்த பலகாரங்களை படைக்க வேண்டும். இதற்கிடையில் வீட்டையும் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். 3 நாட்களும் பூஜை அறை விளக்கு அணையாமல் எரியவேண்டும்.

அதுமட்டுமின்றி அந்த 3 தினங்களுக்கு விநாயகருக்கு பூ அலங்காரங்கள் செய்திருக்க வேண்டும். அதே நேரம் அந்த 3 நாட்கள் வீட்டில் தவறான வார்த்தைகள், எதிர்மறை விஷயங்களை பரப்பக்கூடாது. சொல்லப்போனால் வீட்டில் சண்டை போடுவது, கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது, அழுவது, கத்திக் கொண்டே இருப்பது இப்படி எதுவும் செய்யக்கூடாது.

அதேபோன்று சூதாட்ட விளையாட்டுகளும் விளையாடக்கூடாது. குறிப்பாக அசைவ உணவுகள் சமைக்கக்கூடாது. 3 தினங்களும் விநாயகருக்கு படைத்தபிறகே வீட்டில் உணவு சாப்பிட வேண்டும். இவற்றையெல்லாம் சரியாக செய்தாலே உங்கள் வீட்டில் தீமைகள் விலகி நன்மைகள் சூழும். மேலும் பிரச்னைகளும் நீங்கும். அமைதியும் சாந்தமும் உண்டாகும்.

Categories

Tech |