Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. சொத்துக்காக தந்தை “அடித்து கொலை செய்த மகன்”….. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்…..!!!!!

தந்தையை  அடித்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டை கிராமத்தில் விவசாயியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குமரேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த குமரேசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். ஆனால்  குமரேசன் தனது தந்தையிடம் சொத்தை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு கேட்டுள்ளார். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே  அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் நேற்று முன்தினமும் குமரேசன் தனது தந்தையிடம் சொத்தை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த  குமரேசன் கட்டையால்  தனது தந்தை ரவி  மற்றும் தாய் வள்ளியை  சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ரவி சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயம் அடைந்த வள்ளியை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குமரேசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். இந்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |