Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளத்திலிருந்து வீசிய துர்நாற்றம்!…. விசாரணையில் சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம் தேவசகாயம் ஆலயத்தின் அருகில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளம் ஒன்று இருக்கிறது. இக்குளத்தில் சென்ற சில வாரங்களாக இரவு வேலையில் மர்மநபர் ஒருவர் இறைச்சி கழிவுகளை கொட்டியதாக தெரிகிறது. இதன் காரணமாக குளத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசிவந்தது. அதன்பின் அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் குளத்தை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் ஒரு வாலிபர் மோட்டார்சைக்கிளில் பிளாஸ்டிக் பெட்டியில் இறைச்சி கழிவுகளை ஏற்றியபடி குளத்தில் கொட்டுவதற்கு வந்துள்ளார். இதை கவனித்த பொதுமக்கள் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் அந்த வாலிபரிடம் விசாரணை  மேற்கொண்டார்.

அதில் நெல்லை மாவட்டம் பணகுடி தருமபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த மாணிக்கம் (25) என்பதும், இவரிடம் மார்த்தாண்டம் இறைச்சி கடையிலிருந்து கழிவுகளை சித்திக், சந்திரன் ஆகியோர் கொடுத்து அனுப்பியதும் தெரியவந்தது. முன்னதாகவும் இவர் தான் இறைச்சிகழிவுகளை கொட்டினார் என்பது தெரியவந்தது. அன்பின் காவல்துறையினர் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். அத்துடன் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தற்போது மாணிக்கத்தை கைது செய்தனர்.

Categories

Tech |