வளர்ந்து வரக்கூடிய நடிகர்களில் ஒருவர் நிதின்சத்யா. இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகிய சென்னை -28 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் வாயிலாக பிரபலமடைந்தார். வெகு இடைவெளிக்கு பின் தற்போது இவர் கொடுவா படத்தில் நடித்து வருகிறார். “பேச்சுலர்” திரைப்படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்த சுரேஷ் சாத்தையா இயக்குனராக அறிமுகமாகியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் புகழ், சம்யுக்தா, ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
துவாரகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ராமநாதபுரத்தை மையமாக வைத்து உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடந்தது. இதில் இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் “ஐங்கரன்” கருணாமூர்த்தி, தயாரிப்பாளர் சுந்தர், இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று படக்குழுவினரை வாழ்த்தினார்.