நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் 11 வது தவணை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.இந்த திட்டத்தில் இருக்கும் விவசாயிகள் அனைவரும் கேஒய்சி அப்டேட்டை முடித்திருப்பது கட்டாயம்.
இதற்கான அவகாசம் முடிவதற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாள் என்பதால் உடனே இந்த வேலையை முடித்து விடுங்கள். அப்போதுதான் பன்னிரண்டாவது தவணை படம் உங்களுக்கு வந்து சேரும். இந்நிலையில் பன்னிரண்டாவது தவணைக்கான பணம் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை அரசால் விடுவிக்கப்பட உள்ளது. தற்போது விவசாயிகளுக்கு 12 வது தவணை படம் வழங்குவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
உங்களின் பதிவு எண் அல்லது மொபைல் எண்ணை கொண்டு உங்களது நிலையை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.போர்டலில் நிலையை சரிபார்க்கும் போது மாநிலத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்று எழுதப்பட்டிருப்பதை கண்டால் உங்கள் தவணைக்கான ஒப்புதல் இன்னும் மாநில அரசிடம் பெறவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது கேஒய்சி அப்டேட்டை விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே மொபைல் மூலம் செய்து முடித்து விடலாம்.
மொபைலில் KYC செய்வதற்கான வழிமுறைகள்:
முதலில் https://pmkisan.gov.in/ இணையதளத்திற்குச் செல்லவும்.
இணையதளத்தில் நீங்கள் ஃபார்மர் கார்னரில் e-kyc க்கு செல்ல வேண்டும்.
e-kyc ஐ கிளிக் செய்த பிறகு, நீங்கள் பயனாளியாக இருப்பீர்கள், அதாவது சம்மன் நிதி திட்டத்தின் பலனைப் பெறுபவர். அவரது ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
இதற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைலில் OTP வரும். அதைச் சமர்ப்பித்த பிறகு, e-kyc செயல்முறை நிறைவடையும்.