ஆட்டோவின் மேற்கூறையில் சிறுவர்கள் அமர்ந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பெரெய்லி என்ற பகுதியில் ஒரு ஆட்டோவின் மேற்கூறையில் சில சிறுவர்கள் அமர்ந்தவாறு பள்ளிக்கு செல்கின்றனர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்துள்ளனர்.
மேலும் பள்ளிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய வாகன ஓட்டிகளே குழந்தைகளை அபாயகரமான முறையில் அழைத்துச் செல்வது பொது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மோட்டார் வாகன சட்டப்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும், ஒரு வாகனத்தில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்ற கூடாது எனவும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்