தமிழகத்தில் அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மேற்படிப்பு பயில்வதற்கு உதவியாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டப்படிப்பு,பட்டய படிப்பு மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநீற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் தோறும் மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.உதவி தொகை வழங்கும் திட்டத்திற்கு 90 ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.