பிரிட்டனில் ஒரு பூங்காவில் ரோலர் கோஸ்டரில் பழுது ஏற்பட்டு, ஒரு குழந்தை 20 அடி உயரத்தில் தொங்கிய நிலையில், அதன் தந்தை துணிச்சலுடன் அதில் ஏறி சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரிட்டன் நாட்டின் சவுத் போர்ட்டில் இருக்கும் ப்ளேஷர்லேண்டி பூங்காவில் ஒரு ரோலர் கோஸ்டரில் திடீரென்று பழுது ஏற்பட்டது. எனவே, சுமார் 20 அடி உயரத்தில் ஒன்றரை மணி நேரங்களாக அந்திரத்தில் நின்றது. அதிலிருந்த குழந்தைகள் பயந்து சத்தம் போட்டனர். அப்போது ஒரு சிறுமி மயங்கிய நிலையில் காணப்பட்டதை கண்ட அவரின் தந்தை உடனடியாக அதன் மீது வேகமாக ஏறினார்.
அங்கு சென்று தன் மகளை இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டார். அதன் பிறகு பராமரிப்பு குழுவினர் அந்த பகுதிக்கு சென்று, அதிலிருந்த 19 நபர்களை பாதுகாப்பாக மீட்டனர். அதில் ஒரு குழந்தைக்கு தலையில் அடிபட்டதால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.