ஜெர்மன் நாட்டில் பொது போக்குவரத்து மோசமாக இருப்பதை எதிர்த்து மிதிவண்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தியிருக்கிறார்கள்.
ஜெர்மன் நாட்டில் போக்குவரத்தை சரியாக அமைத்திட வேண்டும் எனவும் மிதிவண்டிக்கான பாதைகள் தனியாக அமைக்கப்பட வேண்டும் எனவும் சுமார் 8500 மிதிவண்டி ஓட்டுனர்கள் சில தூரங்கள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சென்றிருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.
ஒன்பது மணி நேரங்களாக அவர்கள் நெடுஞ்சாலையில் பயணித்தனர். ஜெர்மன் அரசு, வரும் 2026 ஆம் வருடத்திற்குள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிற்கு இருசக்கர வாகன பாதைகள் பாதுகாப்பான முறையில் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.