மகளை கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கபூர் பகுதியில் மோகித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 6 குழந்தைகள் இருக்கின்றனர். இவருடைய மகள் ரேஷ்மாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் வீட்டிற்கு சாப்பிட வந்த மோகித்துக்கு ரேஷ்மா உணவு கொண்டு வந்து தர தாமதப்படுத்தியுள்ளார். இதனால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரேஷ்மா தன்னுடைய தந்தையை சில கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரோகித் ஒரு கத்தியை எடுத்து ரேஷ்மாவை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ரேஷ்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மோகித்தை கைது செய்து ரேஷ்மாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி ரேஷ்மாவுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், தந்தையே மகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.