இந்திய அஞ்சலக திட்டம் பொதுமக்களுக்கு பல சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. மேலும், பலரும் வங்கிகளில் சேமிப்பதை காட்டிலும் பணத்திற்கு பாதுகாப்பும், கூடுதல் நன்மைகளும் அஞ்சல் திட்டங்களில் தான் கிடைப்பதால் இந்திய அஞ்சலக திட்டங்களில் தான் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் அஞ்சலக திட்டம் சந்தாகாரர்களுக்கு வருமான வரி சலுகையையும் வழங்குகிறது. தற்போது இந்திய அஞ்சலக திட்டங்களில் இருக்கும் அதிக வருமானம் மற்றும் வரிச்சலுகை கொடுக்கும் மூன்று அருமையான திட்டங்களை பற்றி பார்க்கலாம்.
முதலாவதாக, சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme) என்னும் சேமிப்பு திட்டம் மூத்த குடிமக்களுக்கு ஒரு சிறப்பான வருமானத்தை வழங்கி வருகிறது. மேலும், இந்த திட்டத்தில் 7.4% வரைக்கும் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும், வரிசலுகையும் வழங்கப்படுகிறது. அடுத்ததாக இந்திய அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் சிறப்பான ஒரு திட்டமாக விளங்கி வரும் பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) வாடிக்கையாளர்களுக்கான ஒரு சிறப்பான சேமிப்பு திட்டமாகும்.
மற்ற திட்டங்களை காட்டிலும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதிக வட்டி விகிதமும், கூடுதல் வரி சலுகையும் வழங்கப்படுகிறது. தற்போது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஆண்டிற்கு 7.1% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் வட்டித் தொகை மற்றும் மெச்சூரிட்டி தொகைக்கு வரி எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. அடுத்ததாக இந்திய அஞ்சலக திட்டங்களில் சிறப்பான ஒரு திட்டமாக விளங்கி வரும் செல்வமகள் சேமிப்பு திட்டம் (Sukanya Samriddhi Account) பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக துவங்கப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலமாக ஆண்டிற்கு 7.6% வரைக்கும் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. 10 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளின் பெயரிலேயே இந்த திட்டத்தை துவங்கலாம்.