Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தமிழகத்தில் பெரும் பரபரப்பு…! கொலையோ, பலாத்காரமோ இல்லை… ஐகோர்ட் சற்றுமுன் உத்தரவு …!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாகவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் முதலில் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்த காவல்துறை, பின்னர் இந்திய தண்டனைச் சட்டத்தில் மைனர் பொண்ணை தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ சட்டம்,  தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் உடைய தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், அதனுடைய விரிவான உத்தரவு  நகலை  இன்று வெளியிட்டது.அந்த விரிவான உத்தரவு நகல்கள் தற்போது நீதிபதி ஜிகே. இளந்திரையன் வெளியிட்டு இருக்கிறார்.

அதன் அடிப்படையில் மாணவி மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாவதாகவும்,  பெற்றோர்கள் வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைகளுக்கு மாறாக மாணவியின்  பெற்றோர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக எனவும் இல்லை எனவும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் மாணவி மாடியில் இருந்து விழும்போது மரத்தில் அடிபட்டதாலே உடலில் பல பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட ரத்தக்கசிவு தான் உடலில் இருந்ததாக அறிக்கைகள் இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்திருக்கிறார். மேலும் பள்ளியினுடைய மூன்றாவது மாடியில் இருந்தது மாணவியின் ரத்தத்தில் கரையல்ல என்றும்,  அது வண்ண பூச்சி என நிபுணர்கள் குழு அறிக்கை அளித்திருப்பதாகவும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் மாணவியின் தற்கொலை கடிதம், சக மாணவிகள் சாட்சி ஆகியவற்றின் அடிப்படையில் வேதியல் பாடம் படித்ததில் உயிரிழந்த மாணவி சிரமப்பட்டு இருப்பதாகவும், அதே சமயம் இரு ஆசிரியர்களும் அறிவுரை கூறிய நிலையில் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்து இருக்கிறார். எனவே தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதிவு செய்திருப்பது தவறு என்று தெரிவித்த நீதிபதி,  இவர்கள் ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்குவதாகவும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்து இருக்கின்றார்.

Categories

Tech |