சிறிய தவறு செய்தாலும் அந்த இருநாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தளபதி ஹொசைன் சலாமி எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது. இதற்கு பதிலடியாக, ஈரான் இராணுவம் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. தற்போது போர் பதற்றம் தணிந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதன் 40-ஆம் நாள் நினைவு நிகழ்ச்சி, அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் (Tehran) நடைபெற்றது.
இதில் பேசிய ஈரான் புரட்சிகர படையின் தளபதி ஹொசைன் சலாமி, (Hossein Salami) அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் மிரட்டல் விடுத்தார். ஈரான் விவகாரத்தில் இரு நாடுகளும் சிறிய தவறு செய்தாலும் அந்நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என அவர் மிரட்டும் வகையில் பேசினார்.