மரத்தினால் செய்யப்பட்ட நடைபாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையை பார்ப்பதற்காக தினசரி உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். இதில் குறிப்பாக விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை தினங்களில் கடற்கரையில் அதிக அளவு கூட்டம் காணப்படுகிறது. அதன் பிறகு தினசரி மாலை நேரத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கடற்கரைக்கு அதிக அளவில் வருகிறார்கள். இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக தற்காலிக நடைபாதை அமைக்கப்பட்டது.
இது மக்களிடையே வரவேற்பை பெற்றதால் தற்போது மாநகராட்சி சார்பில் புதிதாக மரத்தினால் ஆன நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் கூட செல்லலாம். இந்த நடைபாதை விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.