Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் கூடிய மழையின் போது…. வாயில்லா ஜீவன்களுக்கு நடந்த விபரீதம்…. அதிகாரிகள் விசாரணை….!!

இடிமின்னல் தாக்கியதில் 5 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இலந்தைகுளம் கிராமத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது அதே ஊரில் வசிக்கும் பூல்பாண்டி என்பவரின் தோட்டத்தில் மாரிமுத்து என்பவர் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இடிமின்னல் தாக்கியதில் தோட்டத்தில் இருந்த 4 வெள்ளாடுகளும், அருகில் மேய்ந்து கொண்டிருந்த அதே ஊரில் வசிக்கும் கோபால் நாயக்கர் என்பவரின் செம்மறி ஆடும் பலியாகின.

இதுகுறித்து தகவலறிந்த வடக்குஇலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் கணபதி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |