Categories
சேலம் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய மற்றொரு லாரி”…. 2 டிரைவர்கள் படுகாயம்….. மருத்துவமனையில் சிகிச்சை…!!!!!!

வேடசந்தூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் இரண்டு டிரைவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

நமது அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பக்கத்து தெருவிற்கு செல்வது தொடங்கி தொலைதூர பயணம் வரை நாம் வாகனங்களை தான் பயன்படுத்துகிறோம். அந்த அளவிற்கு போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்தாலும் தினசரி ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு லாரி ஒன்று வெங்காயம் ஏற்றுக்கொண்டு புறப்பட்டது. இந்த லாரியை சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியகாளம்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவர் ஓட்டி வந்தார். இவர் கரூர்-திண்டுக்கல் இடையேயான நான்கு வழிச்சாலையில் நாகம்பட்டி பிரிவில் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் லாரியை செல்வம் நிறுத்தினார். அப்பொழுது மும்பையில் இருந்து பஞ்சு பேரல்களை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி வந்த லாரி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இதில் இரண்டு லாரிகளும் சேதம் அடைந்தது விபத்தில் செல்வம் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் மற்றொரு லாரியின் டிரைவரான மாணிக்கம் வேடசந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |