Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“காட்டெருமை மீது விழுந்த மரம்”…. குட்டியை ஈன்று உயிரிழந்த சோகம்…!!!!!

கொடைக்கானல் அருகே காட்டெருமை மீது மரம் விழுந்ததில் அது பரிதாபமாக உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் இருக்கின்றது. இந்த காட்டெருமைகளானது அடிக்கடி நகர் பகுதிக்குள் வந்து விடுகின்றது. இந்நிலையில் பில்லர்ராக் செல்லும் வழியில் இருக்கும் ஓய்வு விடுதி அருகே காட்டெருமை ஒன்று வந்துள்ளது.

அப்பொழுது அங்கிருந்த மரம் ஒன்று சாய்ந்து காட்டெருமை மீது விழுந்ததில் காட்டெருமை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதில் காட்டெருமை கர்ப்பமாக இருந்த நிலையில் மரம் விழுந்ததில் குட்டி வெளியே வந்தது. ஆனால் நாய்கள் குட்டியை கடித்துக் குதறியதில் அது உயிரிழந்தது. இதை அடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து காட்டெருமை மற்றும் குட்டியின் உடலை வனப்பகுதியில் புதைத்தனர்.

 

Categories

Tech |