கோழி பண்ணைக்குள் மழை நீர் புகுந்ததால் 3000 கோழிகள் உயிரிழந்தது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் மழைநீர் வீடுகளுக்கு புகுந்து மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குளகிரி பகுதியில் சென்ற இரண்டு நாட்களாக கனமழை பெய்ததால் வீடு, கோவில், விவசாய நிலங்கள் என மழை நீர் புகுந்தது. மேலும் அட்டகுறிக்கி ஏறி முழுவதுமாக நிரம்பியது.
காமன் தொட்டி அருகே இருக்கும் ரவுத் பள்ளி கிராமத்தில் கோழிப்பண்ணைக்குள் தண்ணீர் புகுந்ததால் 2 1/2 லட்சம் மதிப்பிலான மூவாயிரம் கோழிகள் உயிரிழந்தது. இதுபோல கோழி பண்ணைக்கு அருகில் இருக்கும் நர்சரியில் இருந்த 1 1/2 லட்சம் மதிப்பிலான செடிகள், நாற்றுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து வந்த தாசில்தார் மற்றும் அதிகாரிகள் நேற்று நீரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் இது குறித்து ஆட்சியர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என உறுதி அளித்தார்கள்.