இசையமைப்பாளர் சித்து குமார் மனிதவள மேம்பாட்டு அதிகாரியை திருமணம் செய்து கொள்ள போகின்றார்.
சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்பொழுது தமிழ் சினிமா உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகின்றார் சித்து குமார். இவர் தனது முதல் திரைப்படத்திலேயே பாடல்களை ஹிட் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதன் பிறகு பேச்சுலர் திரைப்படத்தில் இவரின் இசையின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார். தற்பொழுது பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் சித்து குமாருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கின்றது. இவர் ஊட்டியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான ராஜி என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போகின்றார். ராஜி அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமொன்றில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு வரும் செப்டம்பர் 9ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.