தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக தான் வழங்கப்படுகிறது. இதற்கிடையில் ரேஷன் கடைகளில் பல்வேறு வகையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் ரேஷன் கடையில் 25 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது போன்ற பல வகையான திட்டங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கடந்த மாதத்தில் கூறியுள்ளார். அதாவது தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் 35 ஆயிரம் நியாய விலை கடைகள் சீரமைக்கப்பட வேண்டும். அடுத்த மூன்று மாதங்களில் இந்த பணிகள் ஓரளவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதோடு ரேஷன் பொருட்களை மக்கள் தாமாக முன்வந்து வாங்க வைக்க விளம்பரத்தை மேற்கொள்ள வேண்டும். மேலும் ரேஷன் கடைகளை மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதாவது 35 ரேஷன் கடைகள் உள்ளன. அதில் பாலடைந்த தூசி படிந்த நிலை உள்ள ரேஷன் கடைகளை கலர்ஃபுல்லாக மாற்றும் விதமாக “நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அதன்படி ரேஷன் கடைகளுக்கு கலர் அடிப்பது, தூய்மை பணிகள் செய்வது உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.