சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த புஷ்பா பாட், 17 வயது முதலே வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளார். இவரின் வாழ்க்கையில் இல்லை என்ற சொல்லுக்கு இடம் இல்லை. கார்ப்பரேட் உலகில் வெற்றிகரமான பெண்மணியாக உருவெடுத்தவர். 50 வயதில் தனது வேலையை உதறித் தள்ளிவிட்டு தன் கனவுகளை நோக்கி நடைபோட தொடங்கி விட்டார். 47 வயதில் தனது ஓட்டப் பந்தைய பயணத்தை தொடங்கினார். அதுவும் ஓட்டம் என்றால் சும்மா 100 மீட்டர் 500 மீட்டர் எல்லாம் கிடையாது மாரத்தான் தான். 58 வயதில் டாடா மும்பை மாரத்தான் இல் முதன்முதலில் கலந்து கொண்டார்.
நான்கு பரிசுகளை தட்டி தூக்கினார். பல்வேறு சாதனைகளை படைத்து அசத்திய இவர் 72 கிலோமீட்டர் தூரம் கொண்ட மாரத்தானில் கலந்து கொள்ள கடந்த நான்கு மாதங்களாக தீவிரமாக தயாராகி வருகிறார். அதற்காக வாரத்திற்கு 90 கிலோ மீட்டர் தூரம் ஓட்டம் மற்றும் ஐந்து யோகா செஷல், மூன்று உடற்பயிற்சி கூட ஷேசன் என பல்வேறு விதங்களில் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுவரை 23 நாடுகளுக்குச் சென்று பல நூறு கிலோமீட்டர் தூரம் ஓடிள்ளார்.
இந்நிலையில் உலகில் மிக உயரமான அல்ட்ரா மாரத்தான் என்று கூறப்படும் கர்துங் லா போட்டியில் தனது 66 ஆவது வயதில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றார். இவர் ஓடப்போகும் உயரம் கடல் மட்டத்திலிருந்து 17,582 அடி மேலே இருக்கிறது.அதில் கலந்து கொண்டால் மிக உயரிய அல்ட்ரா மாறத்தான் போட்டியில் பங்கேற்ற அதிக வயது கொண்ட இந்திய பெண் என்ற பெருமையுடன் புஷ்பா பாட் பெறுவார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.