செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், பிஜேபி எப்பவுமே எந்த விஷயமும் அதிமுகவில் செய்யவில்லை, அன்றைக்கு 2016-17 இல் அம்மாவுடன் ஒரு 15 ஆண்டுகாலம் நெருங்கிய நல்ல நண்பராக, அம்மாவிற்கு வேண்டியவராக மரியாதைக்குரிய பிரதமர் அவர்கள் இருந்தார். இந்த கட்சியை நட்பு ரீதியாக அவர் பார்த்தார்கள், அண்ணா திமுக அழிந்து விடக்கூடாது, அம்மா மறைவுக்குப் பிறகு அம்மா வீட்டிற்கு சென்றவர். எந்த முதலமைச்சர் வீட்டிற்கும் சென்றது கிடையாது. இந்தியாவிலேயே ஒரே வீடு, அம்மா வீட்டிற்கு தான் வந்தார்.
அதனால் அந்த நட்பு ரீதியாக அண்ணா திமுக அழிந்து விடக்கூடாது என்ற காரணத்தில், ஒரு பெரிய மனிதராக சண்டையை தீர்த்து வைப்பது போல் நீங்கள் எல்லாம் ஒற்றுமையாக இருங்கள் கட்சியை அழித்து விட வேண்டாம் என்று, இரண்டு பேரையும் சேர்ந்து வேலை செய்ய சொன்னார். இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்தார்கள். கட்சி நல்லா இருந்தது. அதன் பிறகு மரியாதைக்குரிய பாரத பிரதமருக்கே துரோகம் செய்கின்ற அளவிற்கு எடப்பாடி போய்விட்டார், அது இன்னும் கொஞ்ச நாளில் வெளிப்படும் போது நானே கூறுகிறேன்.
அதான் இப்போது வந்து பாரதிய ஜனதா கட்சி எந்த விதத்திலும் உட்கட்சி விவாகரத்தில் என்றைக்குமே தலையிட்டதில்லை, அன்றைக்கு ஆட்சியில் இருந்தோம், ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அவர் ஆலோசனை கொடுத்தார். ஆட்சியை காப்பாற்றி விட்டாரே ஒழிய, அண்ணா திமுக கட்சி விஷயங்களில் ஒருநாளும் பாரதிய ஜனதா கட்சி தலையிட்டது இல்ல, இப்பவும் தலையிட மாட்டார்கள், அந்த மாதிரி எண்ணத்தில் அவர்களும் இல்லை, நாங்களும் அண்ணா திமுகவிலிருந்து இன்னொரு கட்சிசொல்லி கேட்கின்ற அளவிற்கு இந்த கட்சியில் யாரும் இழிவான செயல்பாடு கொண்டவர்கள் அல்ல என தெரிவித்தார்.