Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாத்தையும் தாங்கி கொண்ட ஓபிஎஸ்…! முடிவெடுத்த எடப்பாடி, வேலுமணி… இமயமலை மாதிரி உயர்ந்துட்டாப்ல ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், நீதிமன்றத்தில் சண்டை வழக்குகள் இருக்கின்றபோது தீர்த்து வைப்பதற்கு தான் நீதிமன்றம். ஆனால் கட்சியின் உடைய உட்கட்சி விஷயத்தில் நீதிமன்றம் தலையிட மாட்டார்கள். அவரும் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல தேர்தல் ஆணையத்தில் இரண்டு பேர் பெயரில் தான் கட்சி  இருக்கிறது.

நான்  20 முறைக்கு மேல் தொலைக்காட்சிகளில் எல்லா இடங்களிலும் சொல்லியிருக்கிறோம், பதினோராம் தேதி நடத்திய கூட்டம் செல்லாது, கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது, நீக்கியதும் செல்லாது, யாரை எல்லாம் இவர்கள் நியமித்தார்களோ அதுவும் செல்லாது. அதனால் அண்ணா திமுகவிற்கு ஒருங்கிணைப்பாளர் தான் கட்சியை வழிநடத்துகிறார், இணை ஒருங்கிணைப்பாளர் இருக்கிறார், இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து தான் வழிநடத்த முடியும்.

இடையிலே தோன்றிய பதவி எல்லாம் காலாவதியாகி விடும் என்று சொல்லி இருந்தேன். இதே நிலை தான் நீதிமன்றம் கூறி இருக்கிறது. இவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையிட்டிருக்கு சென்று இருக்கிறார்கள், அந்த மனுவிற்கு  நல்ல தீர்ப்பு கிடைக்கும், தொண்டர்களுக்கும் இந்த கட்சிக்கும் யாரும் விரோதமாக நாங்களும் செயல்பட மாட்டோம் .

தேர்தல் நேரத்தில் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் போது கட்சித் தலைவர்  ஒருங்கிணைப்பாளர் அவரிடம் காட்டாமல் வேட்பாளர் பட்டியலை வேலுமணியும், தங்கமணியும், எடப்பாடியும் அறிவித்தார்களே… அன்றைக்கு ஏதாவது குழப்பம் செய்து அவர் ஏதாவது சொல்லியிருந்தால், இந்த கட்சியில் என்னை மதிக்காமல் வேட்பாளர் பட்டியல் அறிவித்துவிட்டார் ? என்று சொல்லி இருந்தால், எடப்பாடி தேர்தல் நடத்தி இருக்க முடியுமா? தேர்தல் நடந்திருக்குமா?

அண்ணா திமுகவிற்கு ஓட்டு ஜெயித்திருக்குமா? எவ்வளவு பெருந்தன்மையாக எல்லாவற்றையும் மனதிற்கு வைத்துக்கொண்டு தாங்கி விட்டு, ஒரு பெரிய மனிதர் இமயமலை மாதிரி உயர்ந்து நிற்கின்ற ஓ பன்னீர்செல்வம் அமைதியாக எந்த குற்றச்சாட்டும் சொல்லாமல் தேர்தல் நல்ல முறையாக கட்சி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக செயல்பட்டார்.

நீங்கள் 10.5 சதவீதத்தை கொடுத்து இந்த கட்சி ஜெயிக்கும் என்று சொல்லி மக்கள் பேசுவதை அழித்து விட்டீர்கள். அதனால் இந்த கட்சி தோல்விக்கு காரணமே எடப்பாடி பழனிச்சாமி, அவர் உண்மையாகவே நல்ல ஒரு மனிதராக இருந்திருந்தால் ஓபிஎஸ் அவர்களிடம் நீங்கள் கட்சியை நடத்துங்கள் என்று கட்சியை அவர்களிடம் கொடுத்துவிட்டு அமைதியாக கூட இருந்து வேலை செய்திருக்க வேண்டும்.

அந்த ஒரு பெருந்தன்மை இல்லாத மனிதநேயமும், ஒரு பண்பாடு இதெல்லாம் எதிர்பார்க்க முடியாது எடப்பாடி பழனிச்சாமிடம். அம்மா 28 ஆண்டுகாலம் இருந்த சீட்டுக்கு  துரோகம் செய்து பொதுச்செயலாளராக ஆக வேண்டும் என்று ஆசைப்படும்போது,  இவர் யாருக்கு துரோகம் செய்ய மாட்டார் என தெரிவித்தார்.

Categories

Tech |