பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 5ஆவது விக்கெட்டுக்கு சாதனை படைத்த ஜோடிகளை பற்றி பார்ப்போம்.
அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் முகமது ரிஸ்வான் மட்டும் முடிந்த அளவிற்கு தட்டி தடுமாறி 43 (42) ரன்கள் எடுத்தார்.. மேலும் இப்திகார் அகமது 28 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 148 ரன்கள் அடித்தால் என்ற வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல் ராகுல் நஸீம் ஷா பந்து வீச்சில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின் ரோகித் சர்மா 12 ரன்னில் வெளியேறினார். ஓரளவு தாக்குப்பிடித்த விராட் கோலி 35 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.. சூரியகுமார் யாதவ் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார்.. இந்திய அணி அப்போது 14.2 ஓவரில் 89/4 என்று தடுமாறி கொண்டிருந்தது. அப்போது 3ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பாக பந்துவீச்சாளர்களை கையாண்டனர்.. ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக கடைசிவரை இருவரும் திட்டமிட்டு எடுத்துச் சென்றனர். இருவரும் தேவையில்லாத ஷாட் ஆடாமல் கிடைக்கும் பந்தை மட்டும் பவுண்டரிக்கு விரட்டி, அதிகளவில் 2 ரன்கள் ஓடி எடுத்தனர்.
கடைசியாக இரண்டு ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட, ரசிகர்கள் பரபரப்புடன் பார்த்து கொண்டிருந்த நேரத்தில், 19 வது ஓவரில் ஹர்திக் 3 பவுண்டரி விளாச 14 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 7 ரன்கள் என்ற நிலை வந்த நிலை போது, முகமது நவாஸ் வீசிய முதல் பந்தை, 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 35 (29) ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா சிக்சர் அடிக்க முயன்று கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் இரண்டாவது பந்தில் ஒரு சிங்கிள் எடுத்து ஹர்த்திக்கிடம் கொடுத்தார்.. இதையடுத்து 3ஆவது பந்தை ஹர்திக் அடிக்க அது பீல்டரிடம் சென்று டாட் பாலானது.. அப்போது 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்றதால் ரசிகர்கள், திக் திக் இதயத்துடிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஹர்திக் பாண்டியா தலையை சரித்து நான் பார்த்து கொள்கிறேன் என்பதுபோல கார்த்திக்கிடம் சொன்னார்..
3 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட அந்த பந்தை சிக்ஸர் விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இந்திய ரசிகர்கள் பதட்டத்துடன் இருந்த நிலையில், அவர் பதட்டமடையாமல் சிக்ஸர் அடித்து கூலாக கையை ஸ்டைலாக தூக்கியதுடன், ஆட்டநாயகன் விருதையும் தூக்கி சென்றார். ஹர்திக் 17 பந்துகளில் 1 சிக்ஸர் 4 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து இருந்தார்.. அதேபோல் பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்திய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து 148 ரன்கள் எடுத்து வென்றது.
This one's going down to the wire! 😯#INDvPAK | #AsiaCup2022 | 📝 Scorecard: https://t.co/mKkZ2s5RKA pic.twitter.com/qziCmhboyy
— ICC (@ICC) August 28, 2022
இந்த வெற்றியின் மூலம் இந்தியா கடந்த டி20 கோப்பையில் தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்த போட்டியிலும் வழக்கம் போல இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் ரவிந்திர ஜடேஜா – ஹர்திக் பாண்டியா இணைந்து வெற்றி பெற வைத்தது 2017 சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.. ஏனென்றால் இங்கிலாந்தில் நடந்த அந்த போட்டியில் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் லீக் மற்றும் நாட் அவுட் சுற்றில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் மிகவும் சுமாராக பந்துவீசி 338/4 ரன்களை வாரி கொடுத்தது.
இந்த போட்டியில் குறிப்பாக பும்ரா வீசிய நோ பாலில் அவுட் ஆகி தப்பிய ஃபக்கர் ஜமான் 114 (106) ரன்களை விளாசினார். இதையடுத்து 339 ரன்களை எடுத்து வெற்றி பெற வேண்டும் என்று இலக்கை துரத்திய இந்திய அணியின் டாப் வீரர்கள் அனைவரும் சொதப்பினர்.. ரோஹித் சர்மா 0, விராட் கோலி 5, ஷிகர் தவான் 21 என டாப் ஆர்டர் மட்டுமில்லாமல் தோனி 4, யுவராஜ் சிங் 22, கேதர் ஜாதவ் 9 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் மிக மிக சொதப்பியது.
Hardik-Jaddu ❤️
2017 CT 😭 to 2022 today 😍🫶🏻 #AsiaCup2022 #INDvsPAK #HardikPandya #Jadeja pic.twitter.com/uZ8ePs8zn8— Shiva 🏹 (@Polo_Shiva) August 28, 2022
அப்போது இந்திய அணி 54/ 5 என்று திணறிக் கொண்டிருந்த சமயத்தில் இந்தியா 100 ரன்களை கூட தொடுமா என்பது சந்தேகமாகிவிட ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்து விட்டனர்.. அப்போது எந்தவித பதவட்டமும் இல்லாமல் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா கவலைப்படாமல் சிக்சர்களை பறக்க விட்டார். இவர் ஆடுவதை பார்த்தால் இவர் களத்தில் நின்றால் இந்திய அணி வெற்றி பெறும் என்று அனைவரது மனதிலும் நம்பிக்கையூட்டினார்.. ஆனால் என்னவோ தெரியவில்லை.. துரதிஷ்டவசமாக 4 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 43 பந்துகளில் 76 ரன்கள் விளாசி தெறிக்க விட்டுக் கொண்டிருந்த அவரைப் பார்த்து பாகிஸ்தான் பயந்து கொண்டிருந்த சமயத்தில் பார்த்து தேவையில்லாமல் ரவீந்திர ஜடேஜாவால் ரன் அவுட் ஆனார்.
அதன் பிறகு ஜடேஜாவும் 15 ரன்னில் அவுட் ஆக இறுதியில் இந்தியா 30.3 ஓவரில் 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் அவுட் ஆனா கூட பரவாயில்லை ஆனால் இப்படி துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகி விட்டாரே என்று ரசிகர்கள் இன்றும் ஹைலைட்ஸ் வீடியோவை பார்க்கும்போது புலம்பி வருகின்றனர்.. அதே சமயம் அவர் மட்டும் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இந்தியா கண்டிப்பாக வெற்றி அடைந்திருக்கும் என்பதை ரசிகர்கள் இப்போதும் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அன்றைய நாளில் நடந்த அதே தவறை மீண்டும் இந்த ஜோடி செய்யவில்லை.. நன்றாக புரிதலுடன் ஐந்தாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.. இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 5ஆவது விக்கெட்டுக்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற தோனி – ராபின் உத்தப்பா ஆகியோரது 15 ஆண்டு கால சாதனையும் தகர்த்து விட்டனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜோடிகளின் பட்டியல் :
ஹர்திக் பாண்டியா – ரவீந்திர ஜடேஜா : 52 ரன்கள் (2022)
எம்.எஸ் தோனி – ராபின் உத்தப்பா : 46 ரன்கள் (2007)
விராட் கோலி – ரவீந்திரஜடேஜா : 41 ரன்கள் (2021)
எம்.எஸ் தோனி – விராட் கோலி : 35 ரன்கள் (2016)