Categories
உலக செய்திகள்

“நான் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன்”… நிராகரித்த கிறிஸ் ராக்… இதுதான் காரணமா??….!!!!

அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சென்ற மார்ச் மாதம் நடப்பு ஆண்டிற்கான 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இவற்றில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர்விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதல் முறையாகக் கிடைத்தது. “கிங் ரிச்சர்ட்” படத்தில் நடித்ததற்காக இவ்விருதை அவர் பெற்றார். விருது வழங்கும் நிகழ்ச்சியில் வில்ஸ்மித்தின் மனைவியான ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசினார்.

இந்நிலையில் ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிறிஸ் ராக் கேலி செய்தார். இதனால் அதிருப்தியடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார். சக நடிகரை வில்ஸ்மித் தாக்கிய சம்பவம் உலகளவில் பல விவாதங்களை கிளப்பியது. இந்த சூழ்நிலையில் அடுத்த வதுடன் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை கிறிஸ்ராக் நிராகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |