Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. மலைப் பாதையில் மண்சரிவு…. நெடுஞ்சாலைத் துறையினரின் துரித செயல்….!!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மலைப் பாதைகளில் மண்சரிவு ஏற்படுவது வழக்கம். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும்  நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே அதை சீரமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வெளுத்து வாங்கிய மழை காரணமாக பெரியகுளம் போகும் அடுக்கம் மலைப் பாதையில் குருடிக்காடு என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து மலைப் பாதையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர். அதிலும் குறிப்பாக மலைப் பாதையில் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக மலைப் பாதை சீரமைக்கப்பட்டது. இதனிடையில் அடுக்கம் மலைப் பாதையில் சாலை பணிகள் நடந்து வந்ததால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயணிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து இருந்தது. அதனை தொடர்ந்து பணிகள் தற்போது நிறைவு பெற்றதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயணிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Categories

Tech |