Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடிநீர்…. சாலை…. எல்லா வசதியும்…. நல்லா கிடைக்கணும்….. பூமி பூஜை செய்த….. சாத்தூர் MLA….!!

விருதுநகர் அருகே குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நடைமுறைபடுத்த அப்பகுதி MLA  பூமி பூஜை செய்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அப்பகுதி எம்எல்ஏவான ராஜவர்மன் என்பவர் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டி, 35 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சாலை வசதி, பஸ் நிலையத்தில் சிறிய அளவில் உயர் மின் கோபுரம் அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக பூமிபூஜை நடத்தினார்.

இந்த  நிகழ்வில் ஏராளமான அதிமுக தொண்டர்கள், முக்கிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பூமி பூஜை முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் புதியதாக குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது நடைமுறைக்கு வந்தபிறகு சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு தினம்தோறும் குடிநீர் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |