தமிழகத்தில் உள்ள ஒன்றிய ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலம் தான் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் முதுநிலை பட்டதாரி, ஆசிரியர் உடற்கல்வி, இயக்குனர் மற்றும் கணினி பயிற்சிநர்களுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தகுதி வாரியத்தால் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதன் பிறகு முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுநர்களுக்கான தகுதி தேர்வு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வாரியம் தகுதி தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான சான்றிதழை ஆசிரி யர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ் வழி பயின்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க நாளை தான் கடைசி நாள் என்பதால் விரைவில் சமர்ப்பிக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 17 பாடங்களுக்கு 1:2 என்கின்ற அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியலை ஆசிரியர் தகுதி வாரியம் நேற்று வெளியிட்டது. மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுநர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பதற்கான கால அட்டவணையையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் படி வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 8 – 9 மணி – உயிர் வேதியியல், தாவரவியல் , காலை 9 -10 மணி – தாவரவியல், கணினி அறிவியல், காலை 10 – 11 மணி – கணினி அறிவியல், ஆங்கிலம், காலை 11 – 12 மணி – ஆங்கிலம், மதியம் 12- 1 மணி – ஆங்கிலம், புவியியல், வீட்டு அறிவியல், இந்திய கலாச்சாரம் பாடம், மதியம் 2 – 3 மணி -உடற்கல்வி, இயற்பியல், பிற்பகல் 3 – 4 மணி – இயற்பியல் மற்றும் மாலை 4 – 5 மணி – இயற்பியல், அரசியல் அறிவியல் பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. அதனைப்போல வருகின்ற 3 ஆம் தேதி காலை 8 – 9 மணி – வேதியியல், 9 -10 மணி – வேதியியல், 10 – 11 மணி – வேதியியல், 11 – 12 மணி – வேதியியல், பொருளாதாரமம், மதியம் 12- 1 மணி – பொருளாதாரம், 1- 2 மணி – பொருளாதாரம், வரலாறு, 3 – 4 மணி – வரலாறு, மாலை 4 – 5 மணி – வரலாறு, கணிதம் மற்றும் 5 – 6 மணி – கணிதம் பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. மேலும் வருகின்ற 4 ஆம் தேதி காலை 8 – 12மணி வரை வர்த்தகம் பாடங்களுக்கு, மதியம் 12- 1 மணி – வர்த்தகம், தமிழ் பாடங்கள், 2- 3 மணி – தமிழ், 3 – 4 மணி – தமிழ், விலங்கியல், மாலை 4 – 5 மணி – விலங்கியல் பாடங்களுக்கு மற்றும் மாலை 4 – 5 மணி – வணிகம், விலங்கியல் பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.