Categories
உலக செய்திகள்

உலக பணக்காரர் பட்டியல்…. 3 வது இடத்தில் கவுதம் அதானி….. வெளியான தகவல்….!!!!

துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைத்தொடர்பு என பல துறைகளில் அம்பானி குழுமம் கால் பதித்து வருகிறது. அவ்வாறு தொடர்ந்து தொழிலில் வளர்ந்து வரும் அதானி கடந்து பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த ரிலையன்ஸ் குடும்பத்தின் முகேஷ் அம்பானியை முறியடித்தார். அதனை தொடர்ந்து முன்னேறிய அதானி ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்தார். இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் உலக கோடிஸ்வரர்களின் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி 4 வது இடத்திற்கு முன்னேறினார்.

அதனை தொடர்ந்து 137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானி, பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்டை முந்தி 3 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதன் பிறகு ப்ளூபெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் ஒரு ஆசிய கண்டத்தை சேர்ந்த நபர் முதல் மூன்று இடங்களுக்கு நுழைவது இதுவே முதல் முறையாகும். இப்போது தரவரிசையில் அமெரிக்காவின் எலோன் மஸ்க் மற்றும் ஜெப் பெசோஸ் ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர். மேலும் 91.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 11 வது இடத்தில் உள்ளார்.

Categories

Tech |