Categories
பல்சுவை

எறும்பு தொல்லையை ஒழிக்கணுமா?…. இந்த 5 டிப்ஸ பாலோவ் பண்ணுங்க….!!!!

வீட்டில் எதையும் சமைத்து வைத்தாலோ (அல்லது) சமையல் தொடர்பான பொருட்களை வைத்தாலோ எறும்புகள் மொய்த்து அதனை நாசம் செய்துவிடுவதால் அதை ஒழிப்பதற்கு பெண்களும், வீட்டில் இருப்பவர்களும் பல வழிகளை கையாள்வார்கள். இதற்கென கடைகளிலிருந்து எறும்புமருந்து மற்றும் சாக்பீஸ் வாங்கிவைத்துக் கொள்வது வழக்கம் ஆகும். எனினும் அடுப்பறையிலுள்ள பொருள்களை வைத்தே எறும்புதொல்லையை விரட்டி விடலாம்.

சிட்ரஸ் 

எலுமிச்சை, ஆரஞ்சுபழ தோல்களை எறும்பு நுழையும் இடத்தில் வைத்தால் எறும்புகளால் அதை மீறி உள்ளேவர முடியாது. தோல்களை வைப்பது மட்டுமல்லாது எலுமிச்சை, ஆரஞ்சுபழ சாறையும் எறும்பு நுழையும் இடத்தில் பிழிந்து விடலாம்.

மிளகு

மிளகுதூளை நீரில் கரைத்து அதனை எறும்புகள்வரும் இடம் முழுதும் ஸ்பிரே செய்யலாம். அவ்வாறு ஸ்ப்ரே செய்யும் போது எழும் காரநெடியால் எறும்புகள் வந்த தடமே தெரியாமல் ரிட்டர்ன் ஆகி விடும்.

உப்பு

உப்பை எறும்புகள் நுழையும் மூலைகளில் தூவி விட அவை வீட்டிற்குள்ளே நெருங்காது. இதற்கென பயன்படும் உப்புகல் உப்பாக இருக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

பட்டை

பட்டை மற்றும் கிராம் ஆகியவற்றை பொடிசெய்தோ (அல்லது) அப்படியோ எறும்புகள் வரக்கூடிய இடம் முழுதும் வைத்தால் அவை அடுப்பறையை நெருங்காது.

வினிகர்

வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீர் இரண்டையும் சமஅளவில் எடுத்துக் கொண்டு அதனை நன்கு கலக்கவேண்டும். அதன்பின் எறும்புகள் வரக்கூடிய இடங்களில் ஸ்ப்ரே செய்து விட்டால் எறும்புதொல்லைக்கு வாய்ப்பில்லை. இவ்வாறு வீட்டில் உள்ள பொருள்களை கொண்டே எளிதாக எறும்பு தொல்லையில் இருந்து விடுபடலாம்

Categories

Tech |