Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்….! இனி டிக்கெட் கேன்சல் செய்தால் ஜிஎஸ்டி….. IRCTC யின் புதிய ரூல்ஸ்….!!!!

நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் ரயில் டிக்கெட் வாங்குவது என்பது பெரும்பாடு. இதனால் ரயில் டிக்கெட் முன்னதாகவே பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்து கொள்வது வழக்கம். இருப்பினும் சில நேரங்களில் டிக்கெட் ரத்து செய்ய வேண்டிய தேவை ஏற்படலாம். இந்தநிலையில் ரத்து செய்யப்பட ரயில் டிக்கெட்களுக்கு விதிமுறைகளை மத்திய அரசு மாற்றி உள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கும் ஜிஎஸ்டி கட்டணம் வசூல் செய்யப்படும். ஏனெனில் உறுதி செய்யப்பட்ட ஒரு ரயில் டிக்கெட் என்பது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கும் ரயில்வேக்கும் இடையே உள்ள ஒரு ஒப்பந்தமாக கருதப்படுகிறது. எனவே டிக்கெட் ரப்பு செய்யப்பட்டால் 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |