சென்ற வருடம் நாட்டில் நடந்த குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் ஆகியவை தொடா்பான விபரங்களை தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. இதையடுத்து தற்கொலை மற்றும் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கிறது.
கடந்த வருடம் நாட்டில் நடந்த மொத்த குற்றச் சம்பவங்கள்
மொத்த கொலைகள்- 29,272
மாநிலங்கள் கொலைகளின் எண்ணிக்கை
# உத்தரபிரதேசம்- 3,717
# பிகாா்- 2,799
# மகாராஷ்டிரம்- 2,330
#மத்தியபிரதேசம்- 2,034
# மேற்குவங்கம்- 1,884
2021-ல் தமிழகத்தில் 1,686 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
சென்ற வருடம் நாடு முழுதும் குழந்தைகளுக்கு எதிராக 1,49,404 குற்றங்கள் நடைபெற்றுள்ளது. இவற்றில் முதல் 5 இடங்களில் மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்கள் இருக்கிறது.
மாநிலங்கள் குற்றங்களின் எண்ணிக்கை
# மத்தியபிரதேசம்- 19,173
# மகாராஷ்டிரம்- 17,261
# உத்தரபிரதேசம்- 16,838
# மேற்குவங்கம் -9,523
# ஒடிசா- 7,899
சென்ற ஆண்டு தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக 6,064 குற்றங்கள் நடைபெற்றுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
கடந்த வருடம் நாட்டில் பெண்களுக்கு எதிராக மொத்தம் 4,28,278 குற்றங்கள் நடைபெற்றுள்ளது. இவற்றில் உத்தரபிரதேசம் மிக மோசமான நிலையில் இருக்கிறது.
மாநிலங்கள் குற்றங்களின் எண்ணிக்கை
# உத்தரபிரதேசம்- 56,083
# ராஜஸ்தான்- 40,738
# மகாராஷ்டிரம்- 39,526
# மேற்குவங்கம்- 35,884
# ஒடிசா- 31,352
இந்த 5 மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சென்ற வருடம் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாகவே இருக்கிறது. கடந்த 2021ம் வருடத்தில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக 8,501 குற்றங்கள் நடைபெற்றுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சென்ற ஆண்டு நாட்டில் 293 பெண்கள் பாலியல் வன் கொடுமை மற்றும் கொலை/ கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பாதிக்கப்பட்டு உள்ளனா்.
# உத்தரபிரதேசம் -48
# அஸ்ஸாம்- 47
# மத்தியபிரதேசம்- 38
# மகாராஷ்டிரம்- 23
3 ஜாா்க்கண்ட் 22
இந்த எண்ணிக்கையானது தமிழகத்தில் 5ஆக இருக்கிறது.
தற்கொலை சம்பவங்கள்
சென்ற ஆண்டு நாடு முழுதும் 1,64,033 தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றது. இவற்றில் அதிகமான தற்கொலைகள் நடந்த மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் இருக்கிறது.
மாநிலங்கள் தற்கொலைகளின் எண்ணிக்கை
# மகாராஷ்டிரம்- 22,207
# தமிழகம் – 18,925
# மத்தியபிரதேசம்- 14,965
# மேற்குவங்கம்- 13,500
# கா்நாடகம்- 13,056
தொழில் சாா்ந்த பிரச்னைகள், தனிமைப்படுத்தப்பட்ட உணா்வு, வேதனை, வன்முறை, குடும்பபிரச்னைகள், மனநல பிரச்னைகள், மதுப்பழக்கத்துக்கு அடிமையாகுதல், நிதியிழப்பு, நாள்பட்ட வலி ஆகியவை தற்கொலைக்கு காரணங்களாக இருக்கிறது.
விபத்துகள்
கடந்த வருடம் நாடு முழுதும் சுமாா் 4,22,659 விபத்துகள் நடைபெற்று உள்ளன. அதில் 1,73,860 லட்சம் போ் மரணமடைந்தனா். இவ்விபத்துகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கிறது.
மாநிலங்கள் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
# உத்தரபிரதேசம்- 24,711
# தமிழகம் -16,685
# மகாராஷ்டிரம் -16,446
# மத்தியபிரதேசம்- 13,755
# ராஜஸ்தான்- 10,698
கள்ளநோட்டு வழக்குகள்
கடந்த வருடம் நாட்டில் மொத்தம் 639 கள்ளநோட்டுகள் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ்நாடு 3வது இடத்தில் இருக்கிறது.
மாநிலம் கள்ள நோட்டு வழக்குகள் எண்ணிக்கை
# மேற்குவங்கம் -82
# அஸ்ஸாம் -75
# தமிழ்நாடு -62
# மகாராஷ்டிரம் -55
# ராஜஸ்தான்- 54