தமிழகத்தில் திருட்டு, கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீசார் அவப்போவது திருடர்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாந்து வருகிறார்கள். மக்கள் அலட்சியமாக பணத்தை கையில், பைக், கார் ஆகியவற்றில் வைக்கிறார்கள் இதனை நூதன முறையில் திருடர்கள் அவற்றை திருடி செல்கிறார்கள். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி அம்பேத்கர் நகரில் அணில் குமார்(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேன் டிரைவர். இவர் கடந்த 26 ஆம் தேதி அன்று சொந்த வேலைக்காக ஓசூருக்கு ஸ்கூட்டரில் சென்றார்.
அப்போது பஸ் நிலைய அருகில் உள்ள ஓட்டல் ஒன்றின் முன்பு அவரது தனது ஸ்கூட்டரை நிறுத்தினார். அதன் பிறகு ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் உள்ள பெட்டியில் ரூ.2,90,000 ஆயிரம் பணத்தை வைத்திருந்தார். இதனையடுத்து அவர் வேலையை முடித்துவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது ஸ்கூட்டரின் சீட்டு திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. அது மட்டும் இல்லாமல் அதுமட்டுமில்லாமல்அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.2,90,000 திருடப்பட்டிருந்ததை கண்டு அணில் குமார் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.