நாடு முழுதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் மக்கள் விரும்பக்கூடிய அடிப்படையில் பரிமாற்ற வசதிகள் உள்ளதால் அதிகளவில் இச்சேவை பயன்படுத்தபடுகிறது. அத்துடன் இந்த ஆப்-ல் புது புது அப்டேட்கள் அந்நிறுவனம் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தகவல்பரிமாற்ற சேவையில் இந்த வாட்ஸ்அப் சேவை முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் தற்போது இதில் மேலும் ஒரு புது வசதியினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப சேவையில் முதலிடம் வகிக்கும் ஜியோ நிறுவனம் இவ்வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதன்படி இச்சேவையின் வாயிலாக மெட்டா மற்றும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் இணைந்து எண்ட்-டு எண்ட் வாட்ஸ்அப் ஷாப்பிங் அனுபவத்தை பெறமுடியும் என தெரிவித்து உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த புது சேவை வாயிலாக ஜியோமார்ட் பொருட்கள் அனைத்தையும் சாட் மூலம் எளிமையாக வாங்க முடியும் என ஜியோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இப்போது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள JioMart on WhatsApp சேவை வாயிலாக பயனாளர்கள் ஜியோமார்ட் இல் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் வாங்கமுடியும். அத்துடன் இந்த சேவையில் பணம் செலுத்துவது என அனைத்தும் வாட்ஸ்அப் வாயிலாகவே செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜியோ மார்ட்டின் வாயிலாக பயனாளர்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி ஷாப்பிங் செய்ய 7977079770 என்ற எண்ணுக்கு Hi என குறுந்தகவல் அனுப்ப வேண்டும். பின் உங்களுக்கு பிடித்தமான ஜியோமார்ட் பொருட்களை நீங்கள் வாட்ஸ்அப்பில் வாங்க முடியும். அதுமட்டுமின்றி இந்த ஜியோ நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய இருக்கிறது. முதல் கட்டமாக சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்யப்படும் எனவும் அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுதும் இந்த 5-ஜி சேவை கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜியோ கொண்டுவரும் 5ஜி இணைய சேவை வாயிலாக தற்போதுள்ள 4-ஜி சேவையை விட 10 மடங்கு வேகத்தில் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.