டெல்லியில் வகுப்பறையில் ஓடிக்கொண்டிருந்த சீலிங் ஃபேன் கழன்று மாணவர் தலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நங்கோலி எனும் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இந்த பள்ளியில் கடந்த 27ஆம் தேதி மாணவர்கள் வழக்கம் போல வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டிருந்தபோது வகுப்பறையில் ஓடிக்கொண்டிருந்த சீலிங் ஃபேன் கழன்று மாணவர் ஒருவரின் தலையில் விழுந்திருக்கின்றது. இதில் காயமடைந்த மாணவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இந்த நிலையில் வகுப்பறையின் கான்கிரீட் சேதமடைந்திருந்ததே இந்த விபத்திற்கு காரணம் என ஆசிரியர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றார்கள். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இது பற்றி பள்ளியின் அதிகாரிகளோ அரசு தரப்பிலும் இதுவரை எந்த கருத்தும் வெளியாகவில்லை.