Categories
உலக செய்திகள்

இலங்கை: விமான சேவையை தனியாருக்கு விற்க போறோம்!!….வெளியான திடீர் தகவல்….!!!!

இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீ லங்கா ஏர்லைன்ஸ் இயக்க பணம் இல்லாததால் தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்திருக்கிறது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவித்து வருவதால், மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்ககூட கையில் பணம் இல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் இலங்கைக்கு முக்கிய வருமானமாக திகழ்ந்து வந்த சுற்றுலாத் துறை கடுமையாக முடங்கியது. இதனால் இதன் முக்கிய போக்குவரத்தான இலங்கைஅரசு விமான சேவை கடும் சரிவை கண்டது. விமான சேவையை இயக்ககூட அரசிடம் பணமில்லை.

இதன் காரணமாக இலங்கை அரசு கட்டுப்பாட்டிலுள்ள விமான சேவையை தனியாருக்கு விற்க முடிவுசெய்யப்பட்டது. இது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நிருபர்களிடம் கூறியதாவது “பணப் பற்றாக்குறை அரசாங்கத்தால் விமானசேவையை நடத்துவதற்கு இனி பணத்தை செலுத்த முடியாது என்பதால், நாட்டின் நஷ்டத்தில் இயங்கும் தேசிய விமான சேவையை தனியார்மயமாக்குவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஸ்ரீலங்கன் விமானசேவையை மறுசீரமைக்கும் முயற்சியில் ஏர் லைன்சின் 49 சதவீத பங்குகளை விற்க அரசு முடிவுசெய்துள்ளது. 51 சதவீதம் பங்குகள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.

Categories

Tech |