இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் ஜெயம்ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் “பொன்னியின் செல்வன் – 1” திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம்ரவி புது படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜெ.ஆர் 30 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இவற்றில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்து இருக்கிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் துவங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜெயம்ரவியின் 31வது திரைப்படம் பற்றிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் டிரைக்டர் அந்தோணி பாக்ய ராஜ் இயக்கும் இந்த படத்திற்கு “சைரன்” என பெயரிடப்பட்டுள்ளது.
ஹோம்மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஆக்ஷன், க்ரைம்,த்ரில்லர் ஜானரில் உருவாகும் “சைரன்” திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அத்துடன் படக் குழு சைரன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டு இருக்கிறது. இப்படத்தில் நடிகர் ஜெயம்ரவி கைதி கதாபாத்திரத்திலும், கீர்த்தி சுரேஷ் காவல் அதிகாரியாகவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.