Categories
சினிமா தமிழ் சினிமா

இதுக்கெல்லாம் ஒரு யோகம் வேணும்… கல்யாணம் தான் அப்படின்னா ஹனிமூனுமா…?

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்காக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை எனவும் மொத்த செலவையும் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளமே ஏற்றுக் கொண்டுள்ளது எனவும் தகவல் வெளியானது. திருமண கவரேஜ் உரிமையை 25 கோடி ரூபாய்க்கு பெற்ற நெட்ஃபிக்ஸ் ஓட்டிடி தளம் மணமக்களின் மேக்கப் திருமணத்திற்கு வந்தவர்கள் தங்கும் வரை அவர்களுக்கான சாப்பாடு, பாதுகாப்பு, திருமண அரங்கின் அலங்காரம் என அனைத்தையும் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து தாய்லாந்தில் ஒரு வாரம் ஹனிமூன் கொண்டாடியுள்ளனர் புதுமண தம்பதிகள் இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஸ்பெயினில் இரண்டாவது ஹனிமூன் கொண்டாடி வருகின்றார்கள். இந்த நிலையில் ஹனிமூனுக்கு கூட விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளமே ஏற்றிருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் தான் அங்கு போட்டோ சூட்டுகளை நடத்தி அவற்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறாராம் விக்னேஷ் சிவன். மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வைபவம் விரைவில் நெட்ப்ளிக்ஸ்ல் ஒளிபரப்பாக உள்ள நிலையில் அதில் திருமணத்தை தாண்டி பல சுவாரசியமான நிகழ்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |