விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி(நாளை) விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபடுவது அவசியம். இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி பெரும் திருவிழாவாக கொண்டாடப்படும். முதன்மை தெய்வமாக விளங்கும் விநாயக பெருமானை முதலில் வணங்காமல் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்க கூடாது என்கிறது இந்து சாஸ்திரம். எளியோருக்கு எளியோராக இருந்து அருள கூடியவர் கணபதி. விநாயகருக்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் வாழ்வில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும் விலகி, நன்மையும், நல் வழியையும் அடைந்திட முடியும்.
விநாயகர் ஸ்லோகம்:
- ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
2. ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
3. அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.
4. மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே
5. சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே