Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2020: ஆர்சிபி அணிக்கு புதிய மாற்றமாவது கைகொடுக்குமா?

ஐபிஎல் தொடரின் முக்கிய அணியாக வலம்வரும் ஆர்சிபி அணி தங்கள் அணியின் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக அணியில் ஏதெனும் மாற்றத்தைச் செய்வது வழக்கம். இதனிடையே நேற்று ஆர்சிபி அணியின் நிர்வாகம் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகளில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் என்று மாற்றம் செய்ததோடு, முகப்பு படத்தையும் நீக்கியது. இதற்கான காரணம் அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கே தெரியாததுதான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று அணியின் புதிய லோகோவை வடிவமைத்துள்ள பெங்களூரு அணி, அதனை வெளியிட்டுள்ளது. புதிய தசாப்தத்தில் புதிய தொடக்கத்தோடு களமிறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 12 சீசனாக ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆர்சிபி அணி, இதுவரை இரண்டு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

அந்த இரண்டு இறுதிப்போட்டியிலும் தோல்வியையே தழுவியுள்ளதால், புதிய லோகோ, வீரர்களின் மாற்றம் இந்த ஆண்டாவது அந்த அணிக்கு அதிருஷ்டத்தைக் கொடுக்குமா என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |