Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“மகளிர் குழுக்களிடம் கடன் பெற்று தருவதாக மோசடி செய்த நபர்கள்”…. ஆட்சியரிடம் மனு கொடுத்த பெண்கள்….!!!!!

கடன் பெற்று தருவதாக கூறி மகளிர் குழுக்களிடம் 4 லட்சத்து 85 ஆயிரம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் ஆட்சியரிடம் புகார் கொடுத்தார்கள்.

மக்கள் தங்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக திடீரென நிதி நெருக்கடி ஏற்படும் பொழுது தொழிலுக்காக உள்ளிட்ட காரணங்களுக்காக கடன் வாங்குகின்றார்கள். இதை சிலர் சாதகமாக பயன்படுத்தி மக்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து விடுகின்றார்கள். அந்த வகையில் நாமக்கல் அருகே உள்ள ரெட்டிபட்டியை சேர்ந்த பெண்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, எங்கள் ஊரில் 64 பேர் சேர்ந்து மகளிர் குழு நடத்தி வருகின்றோம். இந்நிலையில் கரூரை சேர்ந்த சில நபர்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அழகு நகரை சேர்ந்த பெண் ஒருவரும் எங்களிடம் நாங்கள் உங்களுக்கு கடன் பெற்று தருவதாக கூறினார்கள். இதனால் நாங்கள் 64 பேரும் சென்ற 2020 ஆம் வருடம் தல ரூபாய் 18,250 கடனாக பெற்றோம். 2021 வரை கடனை வட்டியும், அசலுமாக திருப்பி செலுத்தி விட்டோம்.

இதை அடுத்து கொரோனா காலம் என்பது கடன் கொடுத்த நிறுவனம் எங்கள் அனைவரும் அசல் மற்றும் வட்டியை அதிகமாக செலுத்தி விட்டீர்கள். இனி நீங்கள் கட்ட வேண்டாம் எனக் கூறினார்கள். ஆனால் அங்கு பணி புரியும் பெண் உட்பட இரண்டு பேர் நீங்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டினால் உங்களுக்கு நாங்கள் 40 லட்சம் காசோலை தருவதாக எங்களிடம் காசோலையை காட்டினார்கள்.

இதனால் நாங்கள் அனைவரும் 4 லட்சத்து 85 ஆயிரத்தை மொத்தமாக கட்டினோம். ஆனால் இதை பற்றி அவர்களிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. இதன் பின்னர் நாங்கள் பணம் பற்றி கேட்டதற்கு கொலை செய்வதாக எங்களை மிரட்டினார்கள். இதனால் அவர்களிடம் இருக்கும் 64 பேரின் காசோலை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, நகல், பத்திரம் உள்ளிட்டவற்றை தர மறுக்கின்றார்கள். ஆகையால் எங்களிடம் ஏமாற்றிய ரூபாய் 4,85,000 மீட்டு தந்து ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |