தனியார் பள்ளி பேருந்து கிளீனர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இருக்கு ராமன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ராமன் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் பேருந்து கிளீனராகவும், பள்ளி உதவியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று வழக்கம்போல் ராமன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சத்யா என்பவர் கொண்டு வந்த புளி சாதத்தை சாப்பிட்டு விட்டு பேருந்து கழுவுவதற்கு சென்றுள்ளார். ஆனால் திடீரென ராமன் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராமனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு ராமனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோவிந்தன் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு கலைச்செல்வன் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து காவல்துறையினர் அதே பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது