Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த சட்டை உங்களுக்கு தேவைதானா…..? நடிகர் விஜய் தேவரகொண்டாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்….!!!!

பிரபல நடிகர் அணிந்திருந்த சட்டையை ரசிகர்கள் இணையதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவர கொண்டா கீதாகோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தமிழில் நோட்டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லைகர் திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு காரணம் அமீர்கான் நடித்த லால் சிங் தத்தா திரைப்படத்திற்கு விஜய் தேவரகொண்டா ஆதரவாக பேசியது தான் என்று கூறப்படுகிறது. அதாவது லால் சிங் தத்தா திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என இணையதளத்தில் ஹேஸ்டேக்குகள் வைரலானது. இதற்கு விஜய் தேவரகொண்டா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இதன் காரணமாக விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படத்தை புறக்கணிக்கும் படியும் இணையதளத்தில் ஹேஷ்டேக்குகள் தீயாக பரவியது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா லைகர் பட விழாவின் போது 3 விதமான துணிகளை ஒன்றாக தைத்தது போன்ற ஒரு சட்டையை அணிந்திருந்தார். இந்த சட்டை வெளிநாட்டு நிறுவனத்தில் தயார் செய்யப்பட்ட மிகவும் காஸ்ட்லியான சட்டை என்று கூறப்படுகிறது. இந்த சட்டையின் விலை 69 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த தகவல் வெளியானதில் இருந்து இந்த சட்டை உங்களுக்கு தேவைதானா என்று விஜய் தேவரகொண்டாவை ரசிகர்கள் இணையதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Categories

Tech |